tamilnadu

பெண் கொலை வழக்கில் காதலனுக்கு ஆயுள் தண்டனை 

 தேனி, செப். 21- தேவாரம் அருகே பெண்ணை கொலை செய்து கிணற்றில்  வீசிய காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. தேவாரம் அருகே ரோட்டுப்பட்டியைச் சேர்ந்த விஜயன் மகள் ரதிமாலா. இவர், குடும்பப் பிரச்னை காரணமாக தனது  கணவர் மற்றும் இரு குழந்தைகளைப் பிரிந்து வந்து தந்தை வீட்டில் இருந்துள்ளார். அப்போது, ரதிமாலாவும், அதே பகுதியைச் சேர்ந்த சாந்தகுமார் என்பவரும் நெருங்கிப்  பழகி வந்துள்ளனர். இதனிடையே, ரதிமாலா காணாமல்போய்விட்டதாக அவரது தந்தை விஜயன் கடந்த 2014 பிப்ரவரி 4ஆம்  தேதி தேவாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசா ரணை நடத்தினர். அதில், ரதிமாலாவுடன் கருத்து வேறுபாடு  ஏற்பட்டதால், அவரை சாந்தகுமார் கொலை செய்து கிணற்றில்  வீசியது தெரிய வந்தது.எனவே, காவல்துறையினர் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து, கடந்த 2014, பிப்ரவரி 8 -ஆம் தேதி சாந்தகுமாரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, தேனி மாவட்ட மகளிர் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. வெள்ளிக்கிழமை வழக்கை  விசாரித்த நீதிபதி ஏ. கீதா, ரதிமாலாவை கொலை செய்து கிணற்றில் வீசிய சாந்தகுமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பளித்தார்.