tamilnadu

img

விவசாயிகள், தொழிலாளர்களை கேரளாவிற்கு அனுமதித்து ஏல விவசாயத்தை பாதுகாக்க தேனி ஆட்சியருக்கு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

தேனி

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் தண்ணீரின்றி  கருகி வரும் ஏல  விவசாயத்தைப் பாதுகாக்க விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களை அனுமதிக்கவேண்டும் என தேனி மாவட்ட ஆட்சியருக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது .

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு கடந்த 22- ஆம் தேதி நள்ளிரவு  முதல் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு அமுல்படுத்தி வருகிறது .இதன் காரணமாக அண்டை மாநிலமான கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் ஏலத் தோட்டங்கள் வைத்துள்ள பல்லாயிரக்கணக்கான விவசாயிங்கள் கேரளா சென்று வர முடியாமல் தவித்து வருகிறார்கள்.  50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் வேலை இழந்து வருகிறார்கள். அவர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கிய நிலையில் 100 நாள் வேலை திட்டமும் முடக்கப்ட்டுள்ளது .

கடும் வறட்சி காரணமாக, மழையின்றி ஏலச்செடிகள் கருகி வருகிறது. மேலும் தற்போது ஏலச்செடிக்கு மருந்து மற்றும் உரம் வைக்க வேண்டிய தருணம் ஆகும். எனவே இடுக்கி மாவட்ட ஆட்சியருடன் பேசி, விவசாயிகள், தொழிலாளர்கள் இடுக்கி மாவட்டம் சென்று வருவதை உறுதி செய்யவேண்டும்.இது தொடர்பாக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் விஜூ கிருஷ்ணன் இடுக்கி மாவட்ட நிர்வாகத்திடம் பேசியுள்ளார் .

எனவே  தேனி ஆட்சியர் இடுக்கி மாவட்ட ஆட்சியரிடம் பேசி ஏலத்தோட்டத்திற்கு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் சென்று வர நடவடிக்கை எடுத்து ஏல விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
 

;