tamilnadu

img

18 மாணவர்கள் தற்கொலை தொடர்பாக தெலுங்கானா அரசுக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

தெலுங்கானாவில் இடைநிலை வகுப்பில் படிக்கும் 18 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது குறித்து அம்மாநில அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


தெலுங்கானாவில் கடந்த மார்ச் மாத இறுதியில் இடைநிலை வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த தேர்வில் மாநிலம் முழுவதும் சுமார் 3 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் தரப்பிலும், பெற்றோர்கள் தரப்பிலும் போராட்டங்கள் எழுந்தன. மேலும், தோல்வி காரணமாக மனமுடைந்து 18 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.


இடைநிலைப்பள்ளி தேர்வு குறித்து விளக்கம் அளிக்கக்கோரி தெலுங்கானா தலைமைச் செயலாளருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், ஆணையம் இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு முறையான நிவாரணம் அளிக்கவும் கூறியுள்ளது. இந்த மனுவில் தேர்வு முடிவுகளை தயார் செய்யும் தனியார் ஒப்பந்த நிறுவனமான Globarena Technologies நிறுவனமும் விசாரணையில் உட்படுத்தப்படவுள்ளது.

;