tamilnadu

img

இலகுரக விமானத் தயாரிப்பில் இலக்கை எட்டிய எச்ஏஎல்

போர் விமானத் தயாரிப்புக்கு போதிய கட்டமைப்பு இல்லை என்று மோடி அரசால் தரம்தாழ்த்தப்பட்ட நிறுவனம்தான், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் (HAL) நிறுவனம் ஆகும். ஆனால், அந்த நிறுவனம் இந்திய ராணுவம் கேட்ட 40 இலகுரக போர் விமானங்களில், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் 16 இலகுரக போர் விமானங்களைத் தயாரித்து சாதனை படைத்துள்ளது. அதாவது 2019 மார்ச் இறுதிக்குள் 16-ஆவது இலகுரக போர்விமானத்தைத் தயாரிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்ததாகவும், அதனை தாங்கள் வெற்றிகரமாக எட்டியிருப்பதாகவும் இந்துஸ் தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் குறிப் பிட்டுள்ளது. தற்போது தயாரிக்கப்பட்டுள்ள விமானங்களில் 2 இலகு ரக போர் விமானங்கள், மலேசியாவில் நடக்கும் விமானக் கண் காட்சியில் பறக்கவிடப்பட உள்ளன; என்றும், மலேசிய கண்காட்சிக்கே, தாங் கள் தான் தொழில்நுட்ப ஒத்துழைப்பு வழங்கி இருக்கிறோம் என்றும் ‘இந்துஸ் தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம்’ தெரி

வித்துள்ளது.

;