tamilnadu

img

பராமரிப்பு உதவித்தொகை கேட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

தென்காசி:
தென்காசி மாவட்டம் சிவகிரிவருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகளின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் வறுமைக் கோட்டுக்கு கீழ் கொண்டு வர வேண்டும். அடையாள அட்டை பெற்றுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் பராமரிப்பு உதவித்தொகை வழங்க வேண்டும் போன்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட இணைச் செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். சி.பி.எம் ஒன்றியச் செயலாளர் நடராஜன், வாசு, ஒன்றிய குழு உறுப்பினர் சுப்பிரமணியம், சிஐடியு ஆட்டோ சங்க மாவட்ட துணை செயலாளர் சக்திவேல், சிஐடியு போக்குவரத்து மத்திய சங்க துணை செயலாளர் அமல்ராஜ்,  ரவீந்திரநாத் பாரதி, ராமசுப்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதே போல் தென்காசி புதுபஸ் ஸ்டாண்ட் முன்பு நடைபெற்றஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்டதுணைத் தலைவர் இசக்கி தலைமை வகித்தார். முத்துக்குமாரசாமி, ஜெயந்தி துணைத் தலைவர்கள், சேக் முகம்மது, சுப்பிரமணியன், சரவணன் முன்னிலைவகித்தனர். விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் கணபதிஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார்.கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.வேல்முருகன் பேசினார். சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் மாரியப்பன் சிறப்புரை ஆற்றினார். புஸ்பம் மாதர்சங்கம், CITU மாவட்டத் தலைவர்வேல்முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சங்கத்தின் மாவட்ட இணைச் செயலாளர் கற்பகம் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து உரையாற்றினார். மேலப்பாவூர் கிளை தலைவர் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் இலஞ்சி, பார்டர் உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து 32 மகளிர் உட்படமொத்தம் 70 மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக அரசு ஓய்வூதியர்/ வங்கிஓய்வூதியர் உள்ளிட்ட தோழமைசங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.நெல்லை: வண்ணார்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட நிர்வாகி பி.தியாகராஜன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கட்சி பாளை தாலுகா செயலாளர் பா.வரகுணன், வாலிபர் சங்க மாவட்ட துணை செயலாளர் கருணா ஆகியோர் போராட்டத்தை ஆதரித்து பேசினர்.மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் சங்கரசுப்பு, இணைச் செயலாளர் பேச்சியம்மாள், நெல்லை வயது வந்தோர் காது கேளாதோர் சங்க மாவட்ட துணை தலைவர் ஞானசிகாமணி, மாவட்ட செயலாளர் மெய்யாசாமி, மாவட்ட துணைச் செயலாளர் ஆபிரகாம், சைகை மொழி பெயர்ப்பாளர் சுமா உட்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அம்பாசமுத்திரம் விகே.புரம் ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்டதுணை செயலாளர் அகஸ்தியர் ராஜன் தலைமை தங்கினார். ஆர்ப்பாட்டத்தை சி.பி.எம் முத்துகிருஷ்ணன் துவக்கி வைத்துபேசினார். சி.ஐ.டி.யு சுரேஷ்பாபு,காதர் பாட்சா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ரவீந்திரன் நிறைவுரை ஆற்றினார்.

;