தூத்துக்குடி:
தூத்துக்குடி கோரம்பள்ளம், வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் தர்மபாலன் மகன் பொன் ஸ்டீபன்(38). இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 25ம் தேதி இரவுமனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் மர்ம நபர், கதவின் தாழ்பாளை உடைத்து வீட்டிற்குள்நுழைந்து அவரது மனைவி கழுத்தில் அணிந்திருந்த 7¾ பவுன் தாலிச் செயின் பறித்துள்ளார்.மேலும் பீரோவில் வைத்திருந்த 4 கிராம கம்மல், வெள்ளிக் கொலுசு ஆகியவற்றை திருடிச் சென்றுவிட்டார்.
இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலையத்தில் பொன் ஸ்டீபன் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர்முத்துகணேஷ் வழக்குப் பதிந்துவிசாரணை நடத்தினார். இது தொடர்பாக நாசரேத் திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்தராஜன் மகன் ராஜ் (41) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 7¾ பவுன் தாலிச்செயினை போலீசார் மீட்டனர்.நகை விற்ற ரூ.50ஆயிரம்பணத்தைபறிமுதல் செய்தனர்.