tamilnadu

டாஸ்மாக் குடோனுக்கு கொண்டு வந்த மதுபாட்டில்கள் திருட்டு?

தூத்துக்குடி,ஜூலை 2- தூத்துக்குடியில் லாரியில் டாஸ்மாக் குடோனுக்கு கொண்டு வந்த 545 மதுபாட்டில்கள் மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி எட்டையபுரம் ரோட்டைச் சேர்ந்தவர் முருகன் மகன் சதீஷ் (33), சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறாார். மேலும், டாஸ்மாக் நிறுவ னத்திற்கு ஒப்பந்த முறையில் லாரிகளை இயக்கி வரு கிறார். செவ்வாயன்று இவரது லாரியில் மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு டாஸ்மாக் மதுபானங்களை கொண்டு வந்துள்ளனர். லாரியை சோனகன் விளையைச் சேர்ந்த முருகேசன் மகன் செந்தூர் பாண்டி என்பவர் ஓட்டி வந்துள்ளார். தூத்துக்குடியில் உள்ள டாஸ்மாக் குடோனில் மது பாட்டில்களை இறக்கிய பின்னர் சரிபார்த்தபோது, அதில் 545 மதுபாட்டில்கள் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.75ஆயிரம் ஆகும். இதுகுறித்து சதீஷ் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் முத்து கணேஷ் வழக்குப் பதிந்து, லாரி டிரைவர் செந்திலிடம் விசாரணை நடத்தி வருகிறார்.