tamilnadu

பணியேற்ற நாளின் அடிப்படையில் தேர்வு நிலை வழங்கப்பட வேண்டும் மின்சார வாரியத்தை எதிர்த்து சிஐடியு தொடுத்த வழக்கில் வெற்றி!

தூத்துக்குடி, மே 28- தூத்துக்குடி மின் பகிர்மான வட் டத்தில் விருப்ப மாறுதலில் வணிக உதவி ஆய்வாளராக பணியேற்ற பி. கருணாகரனுக்கு வணிக உதவி ஆய்வாளராக பணியேற்ற நாளை கணக்கிட்டு தேர்வு நிலை வழங்க வேண்டும் என திருநெல்வேலி தொழி லாளர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள் ளது. அதன் விபரம் வருமாறு. தூத்துக்குடி அனல் மின் நிலை யத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணி புரிந்த  பி.கருணாகரன் 1.5.1999ல் கள உதவியாளராக கடலூர் மின் பகிர்மான வட்டத்தில் பணியேற்றார். பின்பு கட லூர் மின் வட்டத்தில் வணிக உதவியா ளராக பதவி உயர்வு பெற்று 4.5.2004ல் பணி ஏற்றார். குடும்ப சூழ்நிலை காரண மாக தூத்துக்குடி மின் திட்டத்திற்கு விருப்ப ஊர் மாறுதல் கோரி மனு செய்து உத்தரவு பெற்று தூத்துக்குடி மின் வட்டத்தில் 7.11.2007ல் வணிக உதவியாளராகவே பணி ஏற்றார். விருப்ப ஊர் மாறுதலில் வந்ததால் பதவி உயர்வுக்கான முதன்மையை இழந்து கடைசி நபராக பணி ஏற்றார்.

பி.கருணாகரன் 4.5.2004ல் வணிக உதவியாளராக பணியேற்றதால் 4.5.2013ல் ஒன்பது வருடம் நிறை வடைந்து விட்டது. ஆகவே தனக்கு வணிக உதவியாளர் பதவியில் தேர்வு நிலை வழங்கிட கோரி மேற்பார்வை பொறியாளர் தூத்துக்குடி அவர் களுக்கு மனு செய்தார். ஆனால் தூத்துக்குடி மின் பகிர்மான வட்ட நிர்வாகம் பி.கருணாகரன். விருப்ப மாறுதலில் மூப்புரிமையை இழந்து தூத்துக்குடி வட்டத்தில் 7.11.2007ல் பணியேற்றதால் ஒன்பது வருடம் நிறை வடையவில்லை. ஆகவே தேர்வு நிலை, வாரிய உத்திரவுபடி வழங்க இயலாது என மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு தூத்துக்குடி கிளை சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் தொழிலாளர் நீதிமன்றம் திருநெல் வேலி 31.1.2020ல் கருணாகரன் விருப்ப ஊர்மாறுதலில் சென்றாலும் அவர் கடலூர் மின் வட்டத்தில் வணிக உதவி யாளராக பணியேற்ற நாளை கணக் கில் எடுத்து 4.5.2013 முதல் தேர்வு நிலை வழங்கிட வேண்டும் என சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கில் சிஐடியு சார்பாக பி.இசக்கிமுத்து மற்றும் பி.நம்பிராஜ் இருவரும் வாதாடி வெற்றி பெற்றுள் ளனர்.

;