தூத்துக்குடி, மே 26- களப்பணியாளர்கள் விருப்ப ஊர் மாறுதலில் சென்றாலும் பணியேற்ற நாளின் அடிப்படையில் தேர்வு நிலை வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியத்தை எதி ர்த்து சிஐடியு தொடுத்த வழக் கில் வெற்றி கிடைத்துள்ளது. தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்தில் விருப்ப மாறுதலில் வணிக உதவி ஆய்வாளராக பணியேற்ற பி.கருணாகரனுக்கு வணிக உதவி ஆய்வாளராக பணி யேற்ற நாளை கணக்கிட்டு தேர்வு நிலை வழங்க வேண்டும் என தொழிலாளர் நீதிமன்றம் (திருநெல்வேலி) உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்த விபரம் வரு மாறு: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஒப்பந்தத் தொ ழிலாளராக பணிபுரிந்த பி.கருணாகரன் 01.05.1999-ல் கள உதவியாளராக கடலூர் மின் பகிர்மான வட்டத்தில் பணியேற்றார். பின்பு கட லூர் மின் வட்டத்தில் வணிக உதவியாளராக பதவி உயர்வு பெற்று 04.05.2004-ல் பணி ஏற்றார்.
குடும்ப சூழ்நிலை காரணமாக தூத்துக்குடி மின் திட்டத்திற்கு விருப்ப ஊர் மாறுதல் கோரி மனு செய்து, உத்தரவு பெற்று, தூத்துக்குடி மின் வட்டத் தில் 07.11.2007-ல் வணிக உத வியாளராகவே பணி ஏற்றார். விருப்ப ஊர் மாறுதலில் வந்ததால் பதவி உயர்வுக் கான முதன்மையை இழந்து கடைசி நபராக பணி ஏற்றார். பி.கருணாகரன் 04.05. 2004-ல் வணிக உதவியா ளராக பணியேற்றதால் 04.05. 2013-ல் ஒன்பது வருடம் நிறை வடைந்து விட்டது. ஆகவே தனக்கு வணிக உதவியாளர் பதவியில் தேர்வு நிலை வழங்கிட கோரி தூத்துக்குடி மேற்பார்வை பொறியாள ரிடம் மனு அளித்தார். ஆனால் தூத்துக்குடி மின் பகிர்மான வட்ட நிர்வாகம், பி.கருணாக ரன் விருப்ப மாறுதலில் மூப்பு ரிமையை இழந்து தூத்து க்குடி வட்டத்தில் 07.11.2007-ல் பணியேற்றதால் ஒன்பது வரு டம் நிறைவடையவில்லை. ஆகவே தேர்வு நிலை வாரிய உத்தரவுபடி வழங்க இய லாது என மறுக்கப்பட்டது.
இதை எதிர்த்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு(சிஐடியு) தூத்து க்குடி கிளை சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றம் 31.01.2020-ல் கருணாகரன் விருப்ப ஊர்மாறுதலில் சென்றாலும் அவர் கடலூர் மின் வட்டத்தில் வணிக உத வியாளராக பணியேற்ற நாளை கணக்கில் எடுத்து 04.05.2013 முதல் தேர்வு நிலை வழங்கிட வேண்டும் என சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கில் சிஐடியு சார்பாக வழக்கறிஞர்கள் பி.இசக்கிமுத்து மற்றும் பி.நம்பிராஜ் இருவரும் கலந்து வாதாடி வெற்றி பெற்றுள்ளனர்.