tamilnadu

img

உயிருக்கு போராடும் பிஞ்சுக் குழந்தைக்கு ‘ஜிகாதி’ முத்திரை

திருவனந்தபுரம், ஏப்.17-கேரள மாநிலம் காசர்கோடிலிருந்து கொச்சிக்கு ஆம்புலன்சில் கொண்டுசெல்லப்பட்ட பிஞ்சுக்குழந்தையை “ஜிகாதியின் விதை” என்று அவதூறு பரப்பிய பினில் சோமசுந்தரம் என்கிற அந்த இந்து ராஷ்ட்டிர சேவகனுக்கு எதிராக ஸ்ரீஜித் பெருமனா என்கிற வழக்கறிஞர் இந்த புகார் கொடுத்துள்ளார்.காசர்கோடு வித்யாநகரைச் சேர்ந்த மிஷ்தாப்-ஷானியா தம்பதியினரின் பிஞ்சுக்குழந்தைக்கு அவசர சிகிச்சை அளிக்க கேரள அமைச்சர் கே.கே.சைலஜா மாநில அரசின் ஹிருதயம் திட்டத்தின்கீழ் சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடு செய்தார். முதல்வர் பினராயிவிஜயன் தலையிட்டு மங்களுரில் உள்ள பாதர்முள்ளேழ்ஸ் மருத்துவமனையிலிருந்து 480 கிலோமீட்டர் தூரத்தை அந்த ஆம்புலன்ஸ்ஐந்து மணி நேரத்தில் போக்குவரத்து இடையூறு இல்லாமல் கொச்சி அமிர்தா மருத்துவமனைக்கு அந்த குழந்தையுடன் வந்து சேர உதவினார். தீவிர சிகிச்சை பிரிவில் குறிப்பிட்ட நேரத்துக்குள் கொண்டு வந்து சேர்த்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர், உதவிய காவல்துறையினர், இந்த சிறப்பு ஏற்பாடு செய்த முதல்வர், அமைச்சருக்கு கேரள மக்கள் சமூக ஊடகங்களில் பாராட்டு தெரிவித்தனர்.இந்நிலையில் பிறந்து 15 நாட்கள் மட்டுமே ஆகியிருந்த அந்த சிசுவை “ஜிகாதியின் விதை” என பினில் சோமசுந்தரம் விஷம் கக்கும் வார்த்தைகளால் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். இதற்கு வலுவான எதிர்ப்பை கேரள மக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்து ராஷ்ட்ரிய சேவகன் என தன்னை அறிமுகம் செய்துள்ள இந்த நபர் மீதுவழக்கறிஞர் ஸ்ரீஜித் பெருமனா டிஜிபியிடம் புகார் கொடுத்துள்ளார்.

;