tamilnadu

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி:
மத்திய அரசே தேசியக் கல்விக் கொள்கையைத் திரும்பப் பெறுக, தமிழக அரசே தேசியக் கல்விக் கொள்கையைத் தமிழகத்தில் அமலாக்காதே, நீட் தேர்வை ரத்து செய்‌கஎன வலியுறுத்தி தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிரான ஒடுக்கப்பட்டோர் கூட்டியக்கம்  சார்பில்  வியாழனன்று  விளாத்திகுளம் பழையதாலுகா அலுவலகம் அருகில்கருப்புப் பட்டை அணிந்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு  தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் புவிராஜ் தலைமை தாங்கினார்.விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் வில்லாளன்  ரெஸ்லி, ஆதித்தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் வினோத் மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்

ஆர்ப்பாட்டத்தில்  வாலிபர் சங்க தாலுகா செயலாளர் பாலா,சிஐடியு தாலுகா ஒருங்கிணைப்பாளர் ஜோதி, விசிக  தொழிலாளா் அணி மாவட்ட அமைப்பாளா் மு.பரமசிவம், இளஞ்சிறுத்தைஎழுச்சி பாசறை தொகுதி செயலாளா் ஆ.சடையாண்டி, ஆதித்தமிழர் கட்சிநகர தலைவர் முத்துகருப்பசாமி, நகர செயலாளர் சசிகலா, ஒன்றிய இளைஞரணிசெயலாளர்  திருப்பதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி
புதிய கல்விக் கொள்கையைமத்திய அரசு திரும்பப் பெறக்கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில்நெல்லை பாளையங்கோட்டையில் பெரியார் சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர் ஆர்.கிருஷ்ணன் தலைமை தாங்கினார் .மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர்கே.ஜி.பாஸ்கரன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். ,திராவிடர் தமிழர் கட்சி கதிரவன், ஆதித்தமிழர் பேரவை ரமேஷ் அம்பேத்கர்,தமிழ் புலிகள் தமிழ்மாறன், ஆதித்தமிழர் கட்சி ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ஸ்ரீராம், மாவட்டத் தலைவர் ஆர்.மதுபால், மாநிலக் குழு உறுப்பினர் பூ.கோபாலன், சிபிஎம் தாலுகா செயலாளர்  வரகுணன்,சிபிஎம் நெல்லை தாலுகா செயலாளர் சுடலை ராஜ் ஆகியோர்  பேசினர்.முன்னதாக பெரியார் சிலைக்கு சி.பி.எம். மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

;