tamilnadu

img

மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, ஜூலை 19- ஊரடங்கு காலத்தில் 21 வகை அத்தியாவசிய பொருட்களை டிசம்பர் மாதம் வரை இலவசமாக ரேசன் கடை மூலம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் தூத்துக்குடியில் 23 இடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பூமயில், மாவட்ட தலைவர் விஜயலெட்சுமி, பொருளாளர் ராமலெட்சுமி, மாவட்ட நிர்வாகிகள் கலைச்செல்வி, கமலம், மாவட்ட குழு உறுப்பினர்கள் காளியம்மாள், சரஸ்வதி, உலகமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.