தூத்துக்குடி, ஜூலை 29- நூறு நாள் வேலையை இருநூறு நாட்க ளாக அதிகப்படுத்த வேண்டும், ஊரடங்கு காலத்தில் வேலையிழந்த விவசாயிகளுக்கு நிவாரணமாக ரூபாய் 7,600 வழங்க வேண்டும், 60 வயதுக்கு மேற்பட்ட முதிய வர்களுக்கு உதவித்தொகை மாதம் ரூபாயாக 3000 வழங்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில் பட்டி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் தோழர்.தெய்வேந்திரன் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்ட தலை வர் மணி, மாவட்ட பொருளாளர் இராமசுப்பு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கணேசன், தினேஷ்குமார், மற்றும் விஜயராஜ், மாரி யப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எட்டையபுரம்
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் எட்டையபுரம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பொன்னையா தலைமை தாங்கினார் .விதொச மாவட்ட தலை வர் கு.ரவீந்திரன் பேசினார். சிபிஎம் தாலுகா குழு உறுப்பினர்கள் நடராஜன் பால முருகன், முருகேசன் ,சிஐடியு ஆட்டோ சங்க தலைவர் கண்ணன், நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.