tamilnadu

img

தூத்துக்குடியில் சிபிஎம் மக்கள் சந்திப்பு இயக்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேசம் காப்போம் பிரச்சார இயக்கம் கோவில்பட்டி கிழவிபட்டி பகுதியில் நடைபெற்றது. கிளைச் செயலாளர்கள் பொன்ராஜ், சித்ரா ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், ஒன்றியச் செயலாளர் மோகன்தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காயல்பட்டணம் கீழ லெட்சுமிபுரத்தில் கலைச்செல்வி தலைமையில் பிராட்டி முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எட்டையபுரத்தில் கட்டுமான கட்சி கிளை எட்டையபுரம் 1வது பகுதி கிளை சார்பில் நடந்த மக்கள் சந்திப்பு இயக்கத்திற்கு கிளை செயலாளர் செல்வகுமார் தலைமை வகித்தார். தாலுகா செயலாளர் கு.ரவீந்திரன், நகர கிளை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாநகர் 15-வது வார்டு கிளை சார்பில் பிரச்சார இயக்கம் சனியன்று காந்தி சிலை முன்பு நடைபெற்றது. பிரச்சாரத்திற்கு அழகுபாண்டியன் தலைமை வகித்தார். மாநகர் செயலாளர் ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் குமாரவேல், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் முத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

;