tamilnadu

வணிகர் சங்கம் கோரிக்கை

தூத்துக்குடி, ஜூலை 30- தூத்துக்குடியில் பேருந்து நிலையம் கட்டு மானப் பணி குறித்த சைட் மேப் வைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணி கர் சங்கங்களின் பேரவை மாநில அமைப்பாளர் சொ.ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.  இதுதொடர் பாக அவர் மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பி யுள்ள மனு:  தூத்துக்குடி நகரை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற முதல்கட்டமாக (அண்ணா பேருந்து நிலையம்) பழைய பேருந்து நிலையத்தினை புதுப்பித்து பல அடுக்கு பேருந்து நிலையமாக மாற்றியமைக்கும் பணி நடப்பதை முறையாக அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படுவது பற்றிய தகவல் வேண்டு கிறோம். மேலும் கட்டுமானப் பணி குறித்த சைட் மேப் வைக்காதது குறித்தும், திட்டமதிப்பீட்டை மக்கள் அறிந்து கொள்ள முடியாத நிலை தொடர்வது குறித்தும் உடனடியாக விளக்கம் மட்டுமல்லாது ஆவன செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது