tamilnadu

img

மாதர் சங்க அகில இந்திய மாநாடு

மும்பையில் எழுச்சியுடன் துவங்கியது

மும்பை, டிச. 28- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், மகளிர் அமைப்புகளில், நாட்டில் உள்ள 23 மாநிலங்களில் ஒரு கோடிக்கும் மேலான உறுப்பினர்களைக் கொண் டுள்ள, மகளிர் உரிமைகள், சமத்துவம் மற்றும் பாதுகாப்பிற்காக எண்ணற்ற போராட்டங்களை நடத்தி வீரநடை போட்டுவரும் மிகப் பெரியதொரு அமைப்பா கும். இவ்வாறு வீரத்தின் சின்னமாக விளங்கும் இச்சங்கத்தின் 12ஆவது அகில இந்திய மாநாடு, மும்பையில் ஆசாத் மைதானத்தில் வெள்ளியன்று துவங்கியது.

மாநாட்டில் 24 மாநிலங்களிலிருந்தும் சுமார் 800 பிரதிநிதிகள் வந்து கலந்து கொண்டிருக்கிறார்கள். மாநாட்டை யொட்டி நடைபெற்ற பேரணியில் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர் கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பி னர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட பிர முகர்களும் கலந்துகொண்டார்கள்.  பேரணியின் நிறைவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் புரவலருமான பிருந்தா காரத், துணைத் தலைவர் சுபா ஷினி அலி, அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே, சிஐடியு மாநில செயலாளரும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினருமான வினோத் நிகோலே, சங்கத்தின் தலைவர் மாலினி பட்டாச்சார்யா, பொதுச் செய லாளர் மரியம் தாவ்லே ஆகியோர் உரை யாற்றினார்கள்.    

தொடக்க நாள் அமர்வு

மாநாட்டின் தொடக்க நாள் அமர்வு பைகுல்லாவில் உள்ள சபுசித்திக் பாலி டெக்னிக்கில் தொடங்கியது. சங்கத்தின் கொடியை தலைவர் மாலினி பட்டாச் சார்யா பிரதிநிதிகளின் உரத்த முழக்கங் களுக்கிடையே ஏற்றினார். தொடர்ந்து பிரதிநிதிகள் தியாகிகள் ஸ்தூபிக்கு அஞ்சலி செலுத்தியபின், மாநாடு தொட ங்கியது. மாநாட்டில் அகில இந்திய பல்க லைக் கழக மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் தப்தி முகோபாத்யாயா  வர வேற்புரையாற்றினார். பின்னர் அஞ்சலி தீர்மானத்தைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். வங்க தேச மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் டாக்டர் ஃபாசியா மாஸ்லம், சிறப்பு விருந்தினர்கள் நடிகர் ஸ்வரா பாஸ்கர், டாக்டர் காசி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.  ஸ்வரா பாஸ்கர் வாழ்த்துரை வழங்கும்போது மாதர் சங்கத்தின் போராட்டங்களை மிக வும் பாராட்டினார். சங்பரிவாரங்களுக்கு எதிரான உண்மையான போராட்டத்தை மாதர்கள்தான் அனைத்து முனைகளி லும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.

பிருந்தா காரத்

பிருந்தா காரத் தன்னுடைய உரை யில், பெண்களின் முன் உள்ள முக்கிய கடமைகளைச் சுட்டிக்காட்டி அவற்றை நிறைவேற்றிட மேற்கொள்ள வேண்டிய போராட்டங்களையும் வலியுறுத்தினார். மாநாட்டின் ஆய்வுப்பொருளாக (theme), “நம் அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம், மகளிர் உரிமைகளை உயர்த்திப்பிடிப்போம், அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபடுவோம், போராடு வோம், முன்னேறுவோம்” என்பதாகும். மாநாடு, பெண்கள், நாட்டின் குடி மக்களாக, தொழிலாளர்களாக மற்றும் பெண்களாக எதிர்கொள்ளும் பிரச்சனை கள் குறித்து விவாதித்திடுகிறது. முக்கிய மாக, பெண்கள் எதிர்கொள்ளும் சமூக மற்றும் சாதிய ஒடுக்குமுறைகள்  குறித் தும், மற்றும் நாடு முழுதும் அவற்றிற்கு எதிராக பெண்களால் மேற்கொள்ளப் பட்ட போராட்டங்கள் குறித்தும்  மாநாடு கவனம் செலுத்துகிறது. மேலும், மேற்கு வங்கம், திரிபுரா, கேரளம், தமிழ்நாடு, ஹரியானா, ஆந்தி ரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா வில் பெண்களுக்கு எதிரான கொடுமை களுக்கு ஆளான பெண்கள் மாநாட்டின் துவக்க நாள் அமர்வன்று கவுரவிக்கப் பட்டார்கள்.   மாநாடு 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.             (ந.நி.)

 

;