tamilnadu

img

நலவாரிய பயன்கள் கிடைக்காமல் துயரத்தில் தொழிலாளர்கள்

திருவாரூர், மே 28- தமிழகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் தொழி லாளர் நலத்துறையின் கீழ் செயல் படும் நலவாரியங்களில் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்துள்ள னர். நலவாரியங்களின் தாய் என்று அழைக்கப்படுகின்ற கேரள மாநி லத்தின் நலவாரிய செயல்பாடுகளை யும், தமிழகத்தின் நலவாரிய செயல் பாடுகளையும் ஒப்பிட்டு பார்த்தால் பலத்த இடைவெளி உள்ளது.  காரணம் கேரளாவில் தொழிலாளர்க ளை இனம் கண்டு ஒருவரும் விடு படாமல் நலவாரியத்தில் இணைத்து அரசு வழங்கி வரும் அரசின் பண பயன்களை பெற்று வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் இலட்சக்கணக் கான ஆண் பெண் தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர் ஆவது என்பதே பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. மேலும் உறுப்பினராக உள்ள வர்கள் அரசின் நிவாரணங்கள் பெரு வதில் மிகப்பெரிய குளறுபடி நிலவுகிறது.

திருவாரூர் மாவட்டம்
இதில் திருவாரூர் மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலகம் தொழிலாளர்களின் பார்வையில் அவ்வளவு எளிதில் தென்படுவதில்லை. காரணம் திருவாரூர் நகராட்சியின் ஒதுக்குபுறமான இடத்தில் மிகுந்த பாதுகாப்போடு இந்த அலுவலகம் “ரகசியமாக” செயல்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்திற்கு இந்த அலுவலகத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாளாக இருந்து வருகிறது.  இந்த அலுவலகத்தின் செயல்பாடு தொழிலாளர்களுக்கு நன்மை விளை விப்பதாக இல்லை. அண்மையில் கொரோனா கால நிவாரண நிதியாக அரசு அறிவித்துள்ள ரூ.2000 பலருக்கு கிடைக்கவில்லை. வாரியத்தில் உறுப்பி னராக இருந்தும் அவரது பதிவு நடை முறையில் இருந்த போதும் அந்த  வாய்ப்பு அவர்களுக்கு மறுக்கப்படு கிறது.  அதை விட கொடுமையாக இடைத் தரகர்கள் இல்லாமல் அந்த அலுவல கத்திற்கு அவ்வளவு எளிதில் தொழி லாளர்கள் சென்று விட முடியாது.

நிவாரண உதவிக்காக இந்த அலுவல கத்திற்கு அலைந்து கொண்டிருக்கிறார் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த எம்.பஷீர் என்பவர். குடவாசல் வட்டம் காப்பணாமங்கலத்தில் வசிக்கும் இவர் 2006 ஆம் ஆண்டு முதல் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ளார். பெயிண்டராக பணியாற்றும் இவர் கட்டு மான தொழிலாளர் நலவாரியத்தின் உறுப்பினர்.  நலவாரியத்தில் ஒவ்வொரு ஆண்டும் முறையாக புதுப்பித்து வரு கிறார். ஆனால் இவருக்கு தற்போது நிவாரண உதவி கிடைக்கவில்லை. இதனால் ரம்ஜான் கொண்டாட கூட சிரமப்பட்டுள்ளனர். அரசு அறிவித்த தொகை மிகச்சிறியது என்றாலும் அது கூட கிடைக்காமல் இவரைப் போல பலரும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியரும், தொழி லாளர் நல அலுவலகமும் இவருக்கான நிவாரண உதவி கிடைப்பதை உறுதி செய்வதோடு விடுபட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் குறிப்பிட்ட காலக்கெடு கொடுத்து கொரோனா கால நிவாரண உதவி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;