tamilnadu

திருவாரூர் , தஞ்சாவூர், நாகப்பட்டினம் முக்கிய செய்திகள்

ஆக.6-ல் ரேஷன் கடைகள் முன்பு சிபிஎம் ஆர்ப்பாட்டம்
திருவாரூர் ஆக 3- ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை முறையாக வழங்காததைக் கண்டித்தும் மண்ணெண்ணெய் அளவை குறைத்து வழங்குவதைக் கண்டித்தும், ரேஷன் கடைகளில் உள்ள குறைபாடுகளை சீர்செய்யக் கோரியும் வரும் 6 ஆம் தேதி ரேஷன் கடைகள் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.  திருவாருரில் பி.ஆர்.சாமியப்பன் தலைமையில் நடைபெற்ற கட்சியின் ஒன்றியக்குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், ஒன்றிய செயலாளர் என்.இடும்பையன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். திருவாரூர் பழைய பேருந்து நிலையத்திற்கு அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 10 ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மேலும் புதிய தேசிய கல்வி வரைவுக் கொள்கையைக் கண்டித்து திருவாரூர் ஒன்றியத்தில் சிபிஎம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதனையொட்டி புலிவலம் மற்றும் மாவூர் பகுதிகளில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி, செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், ஒன்றிய செயலாளர் என்.இடும்பையம், மற்றும் பி.ஆர்.சாமியப்பன், பி.மாதவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கிணறு அமைக்க மானியத்துடன் கடன் 
திருவாரூர் ஆக 3- பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட் ்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் செயல்படுகிறது. எனவே விவசாயி கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நல அலுவலகம், திருவாரூர் மாவட்ட ஆட்சியரகத்தை அணுகி பயன் பெறுமாறு ஆட்சியர் த.ஆனந்த் தெரி வித்துள்ளார்.

இலவச குடிமனைப் பட்டா வழங்க கோரிக்கை 
தரங்கம்பாடி, ஆக. 3- நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகேயுள்ள கீழையூரில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் வட்ட வழங்கல் அலுவலர் பிரான்சுவா தலைமையில் சனியன்று நடைபெற்றது. வருவாய் ஆய்வாளர் சுதமதி,கிராம நிர்வாக அலுவலர் திலக்ராஜ், கிராம உதவியாளர் சேகர் ஆகியோர் பொதுமக்களின் மனுக்களை பெற்றுக் கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக்குழு உறுப்பினர் கே.பி.மார்க்ஸ் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் அளித்த மனுவில் கடந்த 2011 ஆம் ஆண்டு கீழையூர் ஊராட்சிக்குட்பட்ட 57 குடும்பத்தின ருக்கு இலவச குடிமனை பட்டாக்களை அரசு சார்பில் வழங்கியதாகவும், இதுவரை பட்டாவிற்கான இடங்களை ஒதுக்கி தரவில்லை என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். உடனடியாக அனைத்து குடும்பத்தி னருக்கும் இடங்களை ஒதுக்கி தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்: புகார் தெரிவிக்க தொலை பேசி எண்   
தஞ்சாவூர் ஆக.3- தஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட 51 வார்டுகள் சம்பந்தப்பட்ட சாலை வசதி, குடிநீர் பழுது, பாதாள சாக்கடை, தெருமின் விளக்கு எரியாமல் இருத்தல், சுகாதார வசதி மற்றும் இதர குறைகளை மாநகராட்சியில் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-425-1100 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்.  இதில் பெறப்படும் புகார்கள் உடனுக்குடன் அந்தப் பிரிவு தலைமை அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவிந்தீரன் தெரிவித்துள்ளார்.