tamilnadu

img

நாகை, திருவாரூரில் எம்.செல்வராசு, பூண்டி கலைவாணன் வெற்றி

திருவாரூர், மே 24- நாடாளுமன்ற பொதுத்தேர்தல், திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்ட நாகை நாடாளுமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் எம்.செல்வராசு, திருவாரூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் பூண்டி கலைவாணன் ஆகியோர் மக்களின் மகத்தான ஆதரவோடு பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.  நாகை நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.செல்வராசு 5 லட்சத்து 22 ஆயிரத்து 892 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் எம்.சரவணன் 3 லட்சத்து 11 ஆயிரத்து 539 வாக்குகள் பெற்றார். திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 616 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதிமுகவின் சார்பில் போட்டியிட்ட  53 ஆயிரத்து 45 வாக்குகள் பெற்றுள்ளார். அமமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.காமராஜ் 19 ஆயிரத்து 133 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட ஆர்.வினோதினி 8 ஆயிரத்து 144 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

;