குடவாசல், ஜூன் 11- திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், கொரடாச்சேரி ஆகிய ஒன்றியங்க ளில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் ஊராட்சிகள் தோறும் ஊழியர் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. ஊழியர் சந்திப்பு கூட்டங்களில் சம்மேளன மாநில தலைவர் நா.பால சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் கே.முனியாண்டி, மாவட்டத் தலைவர் கே.கோவிந்தராஜ், துணைத்தலைவர்கள் எஸ்.காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். நீடாமங்கலம் ஒன்றியம் வடுவூர், தென்பாதி, வடபாதி,வடுவூர் அக்கரா காரம் ஆகிய ஊராட்சிகளில் ஊழியர் சந்திப்பு கூட்டம் ஒருங்கிணைந்து வடுவூரி நடைபெற்றது. கொரடாச்சேரி ஒன்றியம் பெருந்தரக்குடி, தேவர் கண்டநல்லூர், குளிக்கரை ஆகிய இடங்களில் கூட்டம் நடைபெற்றது. குளிக்கரையில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் கே.கலிய பெருமாள் தலைமை வகித்தார். கூட்டத்தில் தலைவராக வீரசெல்வம், செயலாளராக த.யுவராணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அதே போல் எண்கண், ஆய்க்குடி ஊராட்சி ஊழியர்கள் சந்திப்பு இயக்கம் எண்கண் ஆஞ்சநேயர் கோவில் மைதானத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகிகளாக என்.ஜெயபால், எஸ்.சரசு, ஜெ.விஜய காந்த், பி.உமா, எஸ்.சண்முகம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.