tamilnadu

img

நிவாரணம் - வேலை வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

குடவாசல், ஜூன் 16- கொரோனா பாதிப்பு நிவாரணமாக மாநில அரசு ரூ.5,000 மத்திய அரசு ரூ.7500 அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் வழங்கிட வேண்டும்,100 நாள் வேலையை 200 நாட்களாக அதிகப்படுத்த வேண்டும், மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்கள் பொது மக்களிடம் கறாராக வசூலிக்கும் தவணைத் தொகையை உடனடி யாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக் கையை வலியுறுத்தி சிபிஎம் சார்பில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குடவாசல் மையத்தில் ஐந்து இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.குடவாசல் வி பி சிந்தன் பேருந்து நிலையம் அருகே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆர்.லட்சுமி தலைமை தாங்கினார்.,ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் டி.ஜி.சேகர்,எஸ்.கிருஷ்வநாதன்,கே.ராமதாஸ்ஆகியோர் கலந்து கொண்டனர். கொரோனா பாதிப்பு நிவாரணமாக மாநில அரசு ரூ.5,000 மத்திய அரசு ரூ.7500 அனைத்து குடும்ப அட்டை களுக்கும் வழங்கிட வேண்டும்,100 நாள் வேலையை 200 நாட்களாக அதிகப்படுத்த வேண்டும், மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடம் கறாராக வசூலிக்கும் தவணைத் தொகையை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் திருமானூர் கடைவீதி மில் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் புனிதன் தலைமையில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம் இளங்கோவன் கண்டன உரை நிகழ்த்தினார் இயேசு ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் ஜெயங்கொண்டம் வண்டியும் மகிமை புறம் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் பத்மா தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகாராஜன் ஞானம்மாள் அஞ்சலை உட்பட பலர் கலந்து கொண்டனர் தமிழர் ஒன்றியம் அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.மாவட்டக்குழு உறுப்பி னர் ஏ தங்கராசு கண்டன உரை யாற்றினார் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் டி.தங்கையன் கைத்தறி மாவட்ட துணைத்தலைவர் கண்ணபிரான் தர்மலிங்கம் ஆர் ராமலிங்கம், ஆல்பிரட் உள்பட பலர் கலந்து கொண்டனர்  அரியலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர் துரை அருணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுமாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைசாமி ஒன்றிய குழு உறுப்பினர் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
மன்னார்குடி
 மன்னார்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  ஆசாத்  தெருவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகர செயலாளர் எஸ் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் டி. சந்திரா ,தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நகர செயலாளர் கே.பிச்சைக்கண்ணு ,முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் இரா தாமோதரன் ,சி ஐ டி யு இணைப்பு சங்கத் தலைவர்கள் தனுஷ்கோடி, வீ. கோவிந்தராஜ், ஆட்டோ ஹரிஹரன்  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நகர செயலாளர் மாரிமுத்து ஜனநாயக மாதர் சங்கத்தின் நகர தலைவர்  தெ. சங்கரி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்
குடவாசல் 
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக இந்திய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம் 7 இடங்களில் நடைபெற்றது .இதில் நீடாமங்கலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் சி.டி. ஜோசப் தலைமை தாங்கினார்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.எஸ்.கலியபெருமாள், மாதர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.சுமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் மற்றும் வையகளத்தூரில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி,தேவங்குடியில் மாவட்ட குழு உறுப்பினர் கே.கைலசம் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நன்னிலம் ஒன்றியம்
நன்னிலம் ஒன்றியத்தில் பேரளம் உள்ளிட்ட 8 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கொல்லுமாங்குடி யில் நடை
பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் டி.வீரபாண்டியன் தலைமை தாங்கினார். சிபிஎம் 4 ஆவது வார்டு மாவட்ட  ஊராட்சி உறுப்பினர் ஐ.முகமது உதுமான் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கே.எம்.லிங்கம்,சீனி.ராஜேந்தி
ரன்,ஆர். சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி தெற்கு
திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றியத்தில் 100 நாள் வேலை ககொரானா நிவாரண நிதி  கோரி ஆர்ப்பாட்டம்  நடந்தது.
கொரடாச்சேரி ஒன்றியம்
கொரடாச்சேரி ஒன்றியத்தில் கட்சி சார்பாக 9 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கிளரியத்தில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் கே.சீனி
வாசன் தலைமை வகித்தார், முசிரியம் கிளை திட்டாணிமுட்டம் கிராமத்தில் நடைபெற்றஆர்ப்பாட்டத்தில்   த.வி.ச  மாவட்ட தலைவர் எஸ். வகித்தனர். 
வலங்கைமான் ஒன்றியம்
வலங்கைமான் ஒன்றியம் வேடம்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் என்.இராதா தலைமை தாங்கினார்.கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர், மாவட்ட குழு உறுப்பினர் கே. சுப்பிரமணியன், மற்றும் ஒன்றியகுழு உறுப்பினர்கள் தலைமையில் 8 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் 
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் எஸ்.பி.டி.ராஜாங்கம் தலைமை வகித்தார். ஆட்டோ சங்க நிர்வாகிகள் சி.சண்முகம், ரெங்கநாதன், மல்லீஸ் குமார், பி.கிருஷ்ணசாமி, சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.செல்லதுரை மற்றும் எஸ்.அகஸ்டின் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதே போல வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பி.ரமேஷ் சிறப்புரையாற்றினார்.

;