tamilnadu

img

காலமானார்

மன்னார்குடி, ஜூன் 13- சட்ட மேலவை முன்னாள் உறுப்பினர் என்.சுந்தரேச தேவர் (வயது 95), திருவாரூர் மாவட்டம் தம்பிக்கோட்டையை அடுத்த கீழக்காடு கிராமத்தில் வயது முதிர்வின் காரணமாக காலமானார். இவர் முன்னாள் குடியரசு தலைவர் ஆர்.வெங்கட்ராமன், தலைவர் காமராஜர், திமுக தலைவர் மு.கருணாநிதி ஆகியோரின் நெருங்கிய நண்பர் ஆவார். இரண்டு முறை காங்கிரஸ் கட்சி சார்பில் சட்ட மேலவை உறுப்பினராகவும், மூன்று முறை பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவராகவும், காங்கிரஸ் கட்சியில் மாவட்ட, மாநில பொறுப்புகளையும் வகித்துள்ளார். இவர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சாண்டோ எம்.எம்.ஏ சின்னப்பா தேவரின் சம்பந்தி ஆவார். இவருக்கு வள்ளியம்மை தண்டாயுதபாணி, அலமேலு  மங்கை வெங்கடாஜலம் என்ற இரு மகள்கள் உள்ள னர். தொடர்புக்கு 94435-49091.