tamilnadu

img

தமிழ்நாடு வனப்பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு கேரள காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடு

 நெடுங்குளம், ஜுன் 20- கம்பம்மெட்டு – கம்பம் வழித்தடத்தில் கொள்ளை சம்பவங்களை தடுக்கவும், சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும் கேரள காவல்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள வனப்பகுதியில் செல்லும் கம்பம்மெட்டு - கம்பம் 13 கிலோ மீட்டர் சாலையில் தமிழ்நாடு காவல்துறை யின் உதவியுடன் இந்த கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நடமாடும் காவல் (பேட்ரோல்) கேரள காவல்துறையினரால் மேற் கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு தமிழ்நாடு சென்ற சேற்றுக்குழியைச் சேர்ந்த இளைஞர்களை தாக்கி கொள்ளை யடித்த சம்பவம் நடந்தது. பயணிகளை தாக்குவது மட்டுமல்லாது மறைவான சாலை வளைவுகளில் மரங்களில் பதுங்கி யிருந்து சரக்கு வாகனங்களிலிருந்து விலை உயர்ந்த பொருட்களை கொள்ளை அடிக்கும் சம்பவங்களும் நடந்து வரு கின்றன. இது குறித்து கேரள மின்துறை அமைச்சர் எம்.எம்.மணி முதல்வர் பினராயி விஜயனுடன் ஆலோசனை நடத்தி னார். அதன்படி தமிழ்நாடு காவல்துறை யினரின் ஒத்துழைப்புடன் கேரள காவல் துறையினர் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ள னர். தமிழ்நாட்டு எல்லையில் நடந்து வரும் கொள்ளை சம்பவங்களுக்கு அஞ்சி கடந்த சில நாட்களாக இந்த வழித் தடத்தில் இரவுநேர பயணத்தை பலரும் தவிர்த்து வந்தனர்.

;