tamilnadu

img

தோழர் ரெங்கசாமி படத்திறப்பு

திருத்துறைப்பூண்டி, ஜூன் 6- திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கோமல் முன்னாள் ஊராட்சி தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினருமான தோழர் ரெங்கசாமி பட திறப்பு நிகழ்ச்சி அவரது இல்லத்தில் நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு திமுக ஒன்றிய செயலாளர் பிரகாஷ்  தலைமை வகித்தார். திமுக மாவட்ட துணைச் செயலாளர், ஒன்றிய துணை தலைவர் வழக்கறிஞர் மு.ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பி னர் ஐ.வி.நாகராஜன், தோழர் ரங்கசாமி உருவப் படத்தினை திறந்து வைத்தார்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.என்.முருகா னந்தம், ஒன்றிய செயலாளர் வி.டி.கதிரேசன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் கழக மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் கீராந்தி குநாகராஜ் மற்றும் அனை த்துக் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.