tamilnadu

img

சட்ட விரோதமாக பணி நீக்கம் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூரில் உள்ள போர்டே பர்னிச்சர் இந்தியா என்ற தனியார் நிறுவனத்தில் சட்ட விரோதமாக பணி நீக்கம் செய்துள்ள 16 தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வலியுறுத்தி புதனன்று (ஆக. 5) திருவள்ளூர் மீரா திரையரங்கம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் துணைத் தலைவர் கே.ஜி. முரளிதரன், கிளை நிர்வாகிகள் சுரேஷ், நாராயணன் உள்ளிட்டோர் பேசினர்.