திருவள்ளூர், ஜூலை 28- கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமில் சுகாதாரத் துறையினர் மேற் கொண்ட கொரோனா பரிசோதனை முடிவில் நம்பிக்கை இன்றி மக்கள் அச்சத்தில் உள்ளனர். கும்மிடிப்பூண்டி வட்டாச்சியர் அலுவல கம் அருகில் இலங்கை அகதிகளுக்காக திறந்தவெளி முகாம் உள்ளது. இங்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்ற னர். இந்த முகாமில் ஜூலை 20 அன்று சுகாதார துறையினர் 78 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் 15 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக ஜூலை-25 அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பரிசோதனை செய்துகொண்ட ரமேஷ், அவரது மனைவி மற்றும் இளைய மகனுக்கு தொற்று இல்லை. ஆனால், மூத்த மகனுக்கு மட்டும் தொற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் மன உளைச்ச லுக்கு ஆளான ரமேஷ், மூத்த மகனை சென்னைக்கு அழைத்து வந்து தனியார் ஆய்வகத்தில் பரிசோதனை செய்துள்ளனர்.
அதில், நோய் தொற்றும் இல்லை என தெரி வித்துள்ளனர். இந்நிலையில் ஞாயிறன்று (ஜூலை 26) சுகாதார துறையினர் ரமேஷின் மூத்த மகனை சிகிச்சைக்கு அழைத்து செல்ல முகாமுக்கு வந்துள்ளனர். இதனால் அங்கு வாக்குவாதம் எழுந்தது. குழந்தையை சிகிச்சைக்கு அனுப்ப வில்லை என்றால் உணவு பொருட்கள் வழங்கு வது தடை செய்யப்படும், முகாமில் உள்ள பதிவு ரத்து செய்யப்படும், சிறையில் அடைப் போம் என கும்மிடிப்பூண்டி வட்டாச்சியர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், இலங்கை அகதிகள் முகா மில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். பரிசோதனை முடிவில் நம்பிக்கை ஏற்ப டுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்குள்ள மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.