சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு 80 பேர் பாதிப்பு
சென்னை, அக்.3- தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனை களில் டெங்கு காய்ச்ச லுக்காக சிகிச்சை பெறு வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சல் அறி குறிகளுடன் வருபவர்க ளுக்கு அரசு மருத்துவமனை களில் தனி காய்ச்சல் வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கி றார்கள். தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு 3 ஆயி ரம் பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற னர். பருவ மழைக்கு முன்பே இவ்வளவு பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ள்ளனர். பருவமழை தொடங்கியதும் இந்த எண்ணிக்கை அதிகமாகும் என தெரிகிறது. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மட்டும் 34 குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரு கிறார்கள். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 22 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 10 பேரும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 9 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 5 பேரும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்ற னர். ஸ்டான்லி மருத்துவ மனையில் மட்டும் தினமும் 250 பேர் மர்ம காய்ச்சலுக்கு புறநோயாளியாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். குரோம்பேட்டை மருத்துவ மனையில் 40 பேரும், ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் 130 பேரும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 60 பேரும், ராயப்பேட்டை மருத்துவமனையில் 30 பேரும், எழும்பூர் குழந்தை கள் நல மருத்துவமனையில் 50 குழந்தைகளும் புற நோயாளியாக மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். இதுதவிர பல்வேறு இடங்களில் உள்ள தனியார் கிளினிக்குகளில் 500 பேர் காய்ச்சலுக்காக தினமும் சிகிக்சைப் பெறுகின்றனர். டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை தமிழகத்தில் 7 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் காய்ச்சல் பரவாமல் தடுக்க பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.
உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் இன்று முதல் மக்கள் பார்வைக்கு
திருவள்ளூர், அக்.3- திருவள்ளூர் மாவட்டத்தில், சட்ட மன்றத் தொகுதி வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு ஒரு மாநகராட்சி, 4 நகராட்சிகள், 10 பேரூராட்சிகள் மற்றும் 14 ஊராட்சி ஒன்றியங்களில் வார்டு வாரியாக வாக்காளர்கள் பிரிக்கப்பட்டுள்னர். அனைத்து வார்டுகள் வாரியாக தயார் செய்யப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்டம் ஊராட்சி அலுவல கம், மாநகராட்சி அலுவலகம், அந்தந்த நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் மற்றும் கிராம ஊராட்சி பொருத்தமட்டில் கிராம ஊராட்சிகளின் வார்டுகளின் வாக்காளர் பட்டியல்களை தொடர்புடைய கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலகங்களால் அக்-4 அன்று முதல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட வுள்ளது. உள்ளாட்சி வாக்காளர் பட்டியல்களில் பாகம் மற்றும் வார்டு ஏதும் தவறுதலாக இட மாறியிருப்பின் (உரிமை கோரல்கள் மற்றும் மறுப்புகள்) விண்ணப்பத்தை அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ.), மாநகராட்சி ஆணையர் நகராட்சி, ஆணையர், பேரூராட்சி செயல் அலுவலர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தங்கள் மற்றும் பதிவுகளை ஆட்சேபிக்க விரும்பும் ஒருவர் அதற்கான விண்ணப்பத்தை 1960 ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளிலுள்ள காப்புரைகளின்கீழ் தொடர்புடைய சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரிடம் அளிக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.