tamilnadu

img

திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணிகள் தாமதமாக துவக்கம்

திருவள்ளூர், ஜன.2-  திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்டு 52 கிராம ஊராட்சி கள், 20 ஒன்றிய கவுன்சிலர், 2 மாவட்ட கவுன்சிலர் பதவி களுக்கு தேர்தல் நடை பெற்றது.  இதனைத் தொடர்ந்து வியாழனன்று (ஜன.2) வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது. கன்னிகைக் பேர் மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணும் பணி கலை யிலேயே தாமதமாக துவங்கி யது. மேலும் மாலை 5 மணி நிலவரப்படி 2 ஒன்றிய கவுன் சிலர்கள், 4 கிராம ஊராட்சித் தலைவர்களுக்கான முடிவு கள் மட்டுமே அறிவிக்க ப்பட்டது.
சிபிஎம்
வாக்கு எண்ணிக்கையை துரிதமாக நடத்த வேண்டும் எனமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் எஸ். கோபால் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
காவல்துறை தடியடி
மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கிய 55 ஊராட்சி 26 ஒன்றிய கவுன் சிலர் 2 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு பதிவான வாக்கு கள் பொன்னேரியில் உள்ள உலகநாத நாராயணசாமி அரசினர் கலைக்கல்லூரியில் வாக்கு எண்ணப்பட்டது.  காலை 8 மணிக்கு துவங்க வேண்டிய வாக்கு எண்ணும் பணி காலதாமதமாக 9 மணிக்குதான் தபால் ஓட்டு பதிவான வாக்குப் பெட்டி திறக்கப்பட்டு அதிலிருந்து தபால்கள் எண்ணப்பட்டன. உரிய பயிற்சி இல்லாததால் தபால் ஓட்டுகளை கையாள தெரியாமல் ஊழியர்கள் தவித்தனர். அதன்பின் 9 மணிக்கு தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு சின்னம் வாரியாக பிரிக்கும் பணி தொடங்கியது.இதன்காரண மாக வாக்கு எண்ணும் பணி 2 மணிநேரம் காலதாமதம் ஆனது. இந்நிலையில் சோழ வரம் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் அங்குள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் எண்ண ப்பட்டது. அங்கு முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் முந்திச் செல்ல முயன்றதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தினர். வாக்கு எண்ணும் மையங்களில் காவல்துறை யினர் முன் ஏற்பாடு செய்யாத தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் அவதிப்பட்டனர்.

;