tamilnadu

img

டி.ஜெ.எஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

திருவள்ளூர், மே 9-கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரியில் 6வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் டி.ஜெ.ஆறுமுகம், துணை தலைவர் டி.ஜெ.தேசமுத்து, இயக்குனர்கள் டாக்டர் பழனி, விஜயகுமார், கபிலன், தினேஷ், தமிழரசு, நிர்வாக அலுவலர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் டாக்டர் பழனி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சிறைத்துறை டி.ஐ.ஜி ஏ.முருகேசன் கலந்து கொண்டு 325 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் .விழாவில் அண்ணா பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவி எஸ்.ஷாலினிக்கு, விஐடி வேந்தர் டாக்டர் விஸ்வநாதன் நினைவு தங்க பதக்கத்தை டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினார்.

;