tamilnadu

img

தொடர் மின்வெட்டை கண்டித்து கடையடைப்பு - ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், செப். 25-  தொடர் மின்வெட்டை கண்டித்து குமிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம், தோக்கமூர், பூவலை, எகு மதுரை ஆகிய 4 ஊராட்சி களை சேர்ந்த மக்கள் மற்றும் வியாபாரிகள் புதனன்று (செப்.25) கடையடைப்பு- போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில மாதமாக 8 மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சில நேரங்களில் இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்படு கிறது. இதனால் பள்ளி மாண வர்கள், பொதுமக்கள், வியா பாரிகள் பெரிதும் பாதிக்க ப்பட்டு வந்தனர். இதனை தடுக்க மின்வாரிய அதிகாரி கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  மின்வாரியத்தை  கண்டித்து ஆரம்பாக்கம் அனைத்து வியாபாரிகள் சங்கங்கள், தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் ஆரம்பாக்கம், தோக்கமூர், பூவலை, எகுமதுரை ஆகிய கிராம மக்கள் ஆரம்பாக்கம் பஜாரில்  ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர்.  இதையொட்டி ஆரம்பாக்கத்தில் முழு கடையடைப்பு போராட்டமும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி மின்வாரிய செயற் பொறியாளர், உதவி செயற் பொறியாளர் பன்னீர்  செல்வம், வருவாய் ஆய்வா ளர் ரதி, கிராம நிர்வாக அலுவ லர் மணிகண்டன், ஆரம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சத்யமூர்த்தி ஆகியோர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வழியே மின்சாரத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்  என்றும், ஆரம்பாக்கத்தில் துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்  என்றும்,  ஆரம்பாக்கத்தில் புதிய மின் கம்பங்கள், மின் பாதை சீரமைக்கும் பணி 2 மாதத்தில் நிறைவடையும் என அதிகாரிகள் எழுத்துப் பூர்வமாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து போரா ட்டம் கைவிடப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆரம்பாக்கம் அனைத்து வியாபாரிகள் சங்கச் செயலாளர் ஏ.எஸ்.கோபால் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் ஏ.எம்.முகம்மது ரபீக் வரவேற்றார்.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலை வர் ஜி.சம்பத்  துவக்கிவை த்தார். விவசாய தொழிலா ளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் இ.ராஜேந்திரன், வாலிபர் சங்கச் செயலாளர் அ.லோகநாதன், விவசாயி கள் சங்க வட்ட செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் பேசி னர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.துளசிநாராயணன்  நிறைவுரையாற்றினார்.