tamilnadu

திருவள்ளூர் மாவட்டத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்

 திருவள்ளூர், செப்.29-  திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த 10 பேருக்கு டெங்கு காய்ச்சலும், 21 பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பதும் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலம் நகரியைச் சேர்ந்த சோபனா (12), திருவள்ளூரை சேர்ந்த சோமு (12), பிரசாத்(10), சுபாஷ்(12), பள்ளிப்பட்டு சேர்ந்த விஜய்(17), சுபாஷ்(18), ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த வளர்மதி(26), திருவள்ளூரை சேர்ந்த ஜெயா(70), விஜயலட்சுமி(45), கன்னியம்மாள்(15) தேவி(47),  இவர்கள் 10 பேரும் கடுமை யான காய்ச்சலால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவர்கள் ரத்தப் பரிசோதனை செய்து பார்த்தபோது, டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. மேலும் காச்சலால் 99 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில்ஆண்கள் 16 பேரும், பெண்கள் 5 பேரும் மொத்தம் 21 பேருக்கு டெங்கு காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையின் மருத்துவக் குழு தீவிர கண்காணிப்பில் வைத்து சிகிச்சை மற்றும் பரிசோதனைகளை செய்து வருகின்றனர்.  மேலும் மருத்துவ மனைக்கு தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு அவர்களின் உடலில் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு ள்ளது.

;