இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்டம், தோனிரவு கிளை செயலாளர் சரத் மற்றும் கரோலின் ஆகியோருக்கு சாதி மறுப்பு திருமணம் வெள்ளியன்று (மார்ச் 6) பொன்னேரியில் நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநர் பாலாஜி சக்திவேல், தமுஎகச மாநில துணை பொதுச் செயலாளர் சுந்தரவள்ளி, மாவட்ட பொருளாளர் சி.சுரேஷ், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் மோசஸ் பிரபு,வாலிபர் சங்கத்தின் மீஞ்சூர் பகுதி தலைவர் விநாயகமூர்த்தி உள்ளிட்டபலர் மணமக்களை வாழ்த்தினர். மணமக்கள் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்ற பதாகையை ஏந்தி நின்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.