tamilnadu

img

2 மீட்டர் பாதுகாப்பு வளையம்  பிரேக் தி செயின்  3-ஆம் கட்ட விழிப்புணர்வு 

திருவனந்தபுரம்:
மக்களது உயிர்கள் மதிப்புள்ளவை. மக்களைக் காப்பாற்ற தீவிர போராட்டத்தில் கேரளம் உள்ளது. அதன்படி இரண்டு மீட்டர் பாதுகாப்பு வளையத்துடன் ஒவ்வொரு வரும் பிரேக் தி செயின் 3ஆம் கட்ட விழிப்புணர்வை பின்பற்றுமாறு முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டார்.

உலக நாடுகளிலும் இந்தியாவின் முக்கியநகரங்களிலும் பெருமளவில் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. விழிப்புணர்வால் நாம்இறப்பைக் குறைக்க முடியும். எனவே, பிரேக்தி செயின் பிரச்சாரத்தின் மூன்றாம் கட்டம் ‘உயிரின் மீதான மதிப்புமிகு விழிப்புணர்வு’ என்ற வாசகத்தின் கீழ் தொடங்கப்படுகிறது. இந்த கட்டத்தில் உள்ள எச்சரிக்கை என்னவென்றால், ‘எவரிடமிருந்தும் நோய் பரவலாம்’ என்பதாகும். இதுதான் இந்த கட்டத்திற்கான முன்னெச்சரிக்கையாகும்.சந்தைகள், பணியிடங்கள், வாகனங் கள், மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களிலிருந்து யாரையும் கோவிட் பாதிக்கலாம். அனைத்து தொடர்பு இடங்களிலும் குறைந்தது ‘இரண்டு மீட்டர் பாதுகாப்பு வளையம்’ பராமரிக்க வேண்டும் என்று முதல்வர் மக்களை கேட்டுக் கொண்டார். வைரஸின் இணைப்பை உடைக்க முகமூடியை அணிந்து உங்கள் கைகளை கிருமிநீக்கம் செய்யுங்கள். எந்தவொரு காரணத்திற்காக வும் கூட்டத்தை அனுமதிக்க முடியாது என்று செய்தியாளர்ளிடம் முதல்வர் கூறினார்.

;