tamilnadu

img

உலக விண்வெளி வாரவிழா

திருவண்ணாமலை, அக். 9- திருவண்ணாமலை மாவட்டத்தில்  ஸ்ரீஹரி கோட்ட இஸ்ரோ மையம் சார்பாக நடைபெற்ற  உலக விண்வெளி வார விழா மற்றும் கண்  காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர்  க. சு. கந்த சாமி   தொடங்கி வைத்து சிறப்புரையாற்றி னார்.  இந்நிகழ்ச்சியில், ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி  மையத்தின் தலைவர் முனைவர் ஆர். வெங்கட்ராமன், உபகுழுத் தலைவர் முனை வர். பி. முனிரத்தினம், முன்னாள் குடியரசுத்  தலைவர் திரு. ஏ. பி. ஜெ. அப்துல் கலாம் அவர்களின் பேரன் ஷேக் தாகூத் மேலாளர்  ஆனந்தராஜ், விஞ்ஞானிகள், அருணை பொறியியல் கல்லூரி நிர்வாகத்தினர், பேரா சிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி, கல்லூரி மாண வர்கள் பங்கேற்ற உலக விண்வெளி வார  விழிப்புணர்வு நடைபயணத்தை முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ. பி. ஜெ. அப்துல் கலாம் பேரன் ஷேக் தாகூத் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் பேசியபோது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் முறையாக உலக விண்வெளி வார விழா மற்றும் கண்காட்சியை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்க ளிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறும் மாணவர்கள் அடுத்த முறை ராக்கெட் ஏவுகனை செலுத்தும் நிகழ்வினை நேரடியாக காண்பதற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்” என்றார். மாணவர்கள் கற்பனை உலகத்திற்கு செல்வதற்கு பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். நமக்கு பிடித்த நாம் கனவு  கண்ட வேலை செய்யும் போது தான் நம் பணி  சிறக்கும். இஸ்ரோ விஞ்ஞானிகள் அவர்க ளின் கனவு நனவாகும் வகையில் தங்கள்  பணியை விரும்பி செய்து வருகிறார்கள். இன்றைய போட்டி உலகத்தில் மற்றவர்களை காட்டிலும் நாம் தனித்து எப்படி இருக்க வேண்டும் என பணியாற்றிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த வருடம் உலக விண்வெளி வாரம் கருவாக “நிலவு - கோள்களின் வாசல்”  என்ற  அடிப்படையில் நடத்தப்படுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இந்த ஆண்டும் அதன் பல்வேறு நிலை யங்களில் உலக விண்வெளி வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி  ஆராய்ச்சி மையம் உலக விண்வெளி வார விழாவை பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பயன்பெறும் விதமாக ஆந்திரா, தெலுங் கானா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநி லங்களில் பல்வேறு இடங்களில் கொண் டாடி வருகிறது. இந்து ஆண்டு திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில்  நேற்றும், இன்றும்  இரண்டு நாட்கள் உலக விண்வெளி வார விழா நடத்தப்படுகிறது.