tamilnadu

img

வான்வெளிக்கு வெளிச்சம் தரும் திருவண்ணாமலை மின் கம்பங்கள்

திருவண்ணாமலை,மே 13-திருவண்ணாமலை நகரம் மலையடிவாரப் பகுதி 6 ஆவது வார்டு, பே கோபுரம் 10 ஆவது தெருவில், இரவில் தெருவிளக்கு வெளிச்சம் தருவதில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் பகுதியில் மின்கம்பங் கள் அமைக்கப்பட்டுள் ளன. கம்பங்களில், தெரு விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், அவை தெருவுக்கு வெளிச்சம் தராமல், வான் வெளிக்கு வெளிச்சம் தருவதால் மக்கள் இருளில் தவித்து வருகின்றனர்.மலையடிவாரப் பகுதி என்பதால், விஷ உயிரனங்கள் நடமாட்டம் இருக்கும் மேலும், சமூக விரோதிகள் ஊடுவலும் இருக்கும் எனவே, மக்களின் அச்சத்தை தவிர்க்கும் விதமாக, தெருக்களுக்கு வெளிச்சம் தரும் வகையில், விளக்குளை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.இதேபோல் பே கோபுரம் 10 ஆவது தெருவில், குடிநீர் சுகாதார மின்றி வருகிறது. இப்பகுதி மக்களுக்கு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, மூலம், குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக குடிநீரில் பாசி கலந்து வருகிறது. இதனால் பொது மக்கள் தண்ணீரை குடிக்க முடியாமல் அவதிப்படடனர். இது குறித்து நகராட்சி ஊழியர்களிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர் திருவண்ணாமலை நகர மக்கள்.

;