tamilnadu

திருவண்ணாமலை மலை வலமும், வாக்குப்பதிவும்

திருவண்ணாமலை,ஏப்.16- மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வியாழக்கிழமை மாலை 7:11 மணி முதல், மறுநாள் வெள்ளிக்கிழமை மாலை 5:20 மணி வரை, சித்திரை முழு நிலவு நாள் மலைவளம் செல்லும் நிகழ்வும் திருவண்ணாமலையில் நடைபெறவுள்ளது. இந்த நேரத்தில் பல லட்சம் பக்தர்கள் மலைவளம் செல்ல திருவண்ணாமலைக்கு வருகைதர உள்ளனர். இது குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கர வர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில்,“ சித்ரா பவுர்ணமிக்கு, ஏழு லட்சம் மக்கள் கிரிவலம் வருவார்கள் என, எதிர்பார்க்கப்ப டுகிறது. மக்களின் பாதுகாப்பு பணியில் 1,700 காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 22 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள், 320 சிசிடிவி கேமராக்கள், மற்றும் ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிக்கப்பட உளளது. 2,895 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது” என்றார்.திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி நாளில் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால், மலைவளம் செல்லும் மக்களை பாதிக்காதவாறு வாக்குப் பதிவு இயந்திங்களை வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்ல சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

;