திருவண்ணாமலை, அக். 25- திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியிலிருந்து சென்னைக்கு குளிர் சாதனப் பேருந்துகளை மாநில இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். ஆரணி -சென்னை வழித்தடத்தில் குளிர் சாதன வசதி கொண்ட புதிய பேருந்துகள் இயக்கப்படுவதற்கான துவக்க விழா வெள்ளியன்று(அக்.25) திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற விழா வில் மாநில இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச் சர் சேகூர் எஸ்.இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். ஆரணியிலிருந்து ஆற்காடு,காவேரிப்பாக்கம்,பூந்தமல்லி வழியாக சென்னைக்கு இயக்கப்படும் இந்த குளிர் சாதனப் பேருந்து நாள் ஒன்றுக்கு நான்கு முறை இயக்கப்படு கிறது. ஆரணியிலிருந்து சென்னைக்கு குளிர்சாதனப் பேருந்து இயக்கப்படுவதால் ஆரணி பகுதியில் உள்ள பட்டு உற்பத்தி யாளர்களும், வாடிக்கையாளர்களும், பொதுமக்களும், மாணவர்களுக்கும் இந்த குளிர் சாதன வசதி கொண்ட பேருந்து கள் பயன் உள்ளதாக இருக்கும்.