tamilnadu

img

கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவு நீர்

திருவண்ணாமலை,நவ.14- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஜீவானந்தம் தெருவில், கால்வாயில் சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் நோய்த்தொற்று அச்சத்தில்  அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். இப்பகுதியில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, கால்வாய் நீர்  செல்லும் வழி தடைபட்டுள்ளதால் கழிவு நீர் செல்லாமல் ஒரே இடத்தில்  தேங்கி நிற்கிறது. இதனால் இங்கு டெங்கு கொசு அதிகளவில் உற்பத்தி யாகும் அபாயம் உள்ளது. பாதிக்கப்படும் ஜீவானந்தம் தெரு மக்கள் கழிவுநீர் கால்வாயை சீர மைக்கக் கோரி, பேரூராட்சி செயல் அலுவலரிடம் பலமுறை மனு கொடுத்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், அலட்சியம்  காட்டி வருகிறார். இதனால், குழந்தைகளை வைத்துக் கொண்டு அங்கே  வசிக்க முடியாமல், பொதுமக்கள் வேறு இடத்திற்கு சென்று குடி யிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  இந்த நிலை தொடர்ந்தால் தங்களின் வாழ்வாதாரத்திற்காக, தொடர்  போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று பொதுமக்கள்  கூறுகின்றனர். மேலும், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்த பிரச்ச னையை சரி செய்து, பொது மக்களை காக்க வேண்டும் என்று அப்பகுதி  பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

;