திருவண்ணாமலை, செப். 18- திருவண்ணாமலையில் நடைபெற்ற குறை தீர்வு கூட்டத்தில் பங்கேற்க அதிகாரிகள் வராததால், மாற்றுத்திறனாளிகள் முற்று கைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்து நிலையம் அருகில் உள்ள சார ணர் அரங்கில் நடைபெற்ற மாற்றுத்திறனாளி கள் குறை தீர்வு கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்கவில்லை. அதிகாரிகளுக்கு வேறு நிகழ்ச்சிகள் இருப்பதால், கூட்டத்தை அதி காரிகளின் உதவியாளர்கள் நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளிகள் முற்று கைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது, கடந்த 3 ஆண்டுகளாக குறைதீர்வு கூட்டத்தில் முறை யாக அதிகாரிகள் பங்கேற்பதில்லை. ஊன முற்றவர்கள் என்பதால் அதிகாரிகள் எங் களை உதாசீனப்படுத்துகிறார்கள். இது குறித்து பலமுறை முறையீடு செய்தும் எங்களை அரசு அதிகாரிகள் அலட்சியப்ப டுத்தி வருகின்றனர் என்று தெரிவித்தனர். இதற்கிடையே அங்கு வந்த அதிகாரி கள் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திற னாளிகளை சமாதானப்படுத்தி, குறைதீர்வு கூட்டத்தை தொடர்ந்து நடத்தினர்.