tamilnadu

img

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை

திருவண்ணாமலை, ஜன. 19- திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள  கிராமப்பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என விவசாயி கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது சம்பா பருவ நெல் அறுவடை நடை பெற்று வருகிறது. பொன்னி ரகம், குண்டு நெல் எனப்படும் ஆடுதுறை 36, உள்ளிட்ட மிகச்சில ரகங்களே திருவண்ணாமலை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. ஐ.ஆர்-8, ஐஆர்-20, ஐஆர்-36 உள்ளிட்ட பழைய நெல் ரகங்கள் அறுகிவிட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். நடப்பாண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை குறைந்ததால் மகசூல் குறைந்துள்ளது. வழக்கமாக ஏக்கருக்கு 25  மூட்டைகள் முதல் 30 மூட்டைகள் நெல் மக சூல் கிடைக்கும். தற்போது நோய் பாதிப்பு, பூச்சிகள் தாக்குதலால் 20 முதல் 25 மூட்டை கள் வரை மட்டுமே கிடைக்கிறது. நெல் அறுவடை இயந்திர வாடகை, கூலி  ஆட்கள் பற்றாக்குறை காரணமாக சம்பா பருவத்தில் எதிர்பார்த்த அளவில் லாபம் கிடைக்காததுடன், நஷ்டமும் ஏற்படும் நிலை  உள்ளதாக தெரிவித்தனர். வெளி மார்க்கெட்டில் நெல் விலை குறைவாக இருப்பதால், சம்பா அறுவடைக்கு  பூட்டி கிடக்கும் நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களை திறக்க வேண்டும் என விவசாயி கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;