tamilnadu

img

பால் கொள்முதல் செய்ய மறுப்பு வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

திருவண்ணாமலை, ஜூலை 2- பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஆவின் பால் நிர்வாகம் முழுமையாக கொள்முதல் செய்ய மறுப்பதை கண்டித்து வியாழனன்று (ஜூலை 2) செங்கம் வட்டாட்சி யர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.  செங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள  44 கிராம ஊராட்சிகளும் முழுக்க முழுக்க விவ சாயத்தையும், பால் உற்பத்தியையும் மட்டுமே நம்பி உள்ளன. கொரோனா தொற்று  அதிகரித்து வருவதை காரணம்காட்டி ஆவின் பால் கொள்முதல் நிலையங்களிலிருந்து வரும்  முகவர்கள், விவசாயிகளிடமிருந்து பாலை முழுமையாக கொள்முதல் செய்வதில்லை. மாட்டு தீவனம் கிலோ 60 ரூபாய்க்கு  விற்கப்படும் நிலையில், பாலை முழுமை யாக கொள்முதல் செய்ய மறுக்கின்றனர். தனியார் பால் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பாலை 10 லிருந்து 15 ரூபாய்க்கு கொள் முதல் செய்கின்றன.  எனவே, பாலை முழுமையாக கொள் முதல் செய்யாத அதிகாரிகள் மீதும், பாலை அடி மாட்டு விலைக்கு கேட்கும் தனியார் நிறுவனங்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளிடமிருந்து முழுமையான பாலை கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகமும் அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

;