tamilnadu

img

ரயில் சேவையை மேம்படுத்தக் கோரி ஆரணி எம்.பியிடம் மனு

தி.மலை,நவ.5- திருவண்ணாமலை மாவட்ட மக்களின் தேவைக்கேற்ப ரயில் சேவைகளை மேம்படுத்த, ஆவண செய்யவேண்டு மென, ஆரணி தொகுதி மக்களவை உறுப்பினர் விஷ்ணுபிரசாத்திடம் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கோரி க்கை மனு அளித்தனர். பாண்டிச்சேரி, விழுப்புரத்திலிருந்து, திரு வண்ணாமலை மாவட்டம் வழியாக செல்லும் விரைவு ரயில்கள், போளூர், ஆரணி ரோடு, ரயில் நிலையங்களில் நின்று செல்வதில்லை. விரைவு ரயில்கள், போளூர், ஆரணி ரோடு, ரயில் நிலையங்களில் நின்று சென்றால், இப்பகுதியில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள், வேலைக்குச் செல்வோர், மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு உதவியாக இருக்கும். போளூர், ஆரணி ரோடு ரயில் நிலையங்கள் வழியாக, செல்லும் அதிவிரைவு ரயில்களான,  திருப்பதி – ராமேஸ்வரம்,  ஹவுரா,  கரக்பூர் ஆகிய வண்டிகள் மேற்குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்ல, ஆவண செய்ய வேண்டும். திருவண்ணா மலை யிலிருந்து போளூர், ஆரணி ரோடு, கண்ண மங்கலம், வேலூர், காட்பாடி வழியாக சென்னைக்கு ரயில் போக்குவரத்து இயக்க வேண்டும். அதன் மூலம், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள்,  விவசாயிகள், வியாபாரிகள், வேலைக்கு செல்வோர், மாணவர்கள் உட்பட பலர் பயன்பெறுவர்  மேற்கண்ட இரண்டு கோரிக்கைகளையும் மத்திய அரசிடம் முறையீடு செய்து நிறைவேற்ற வேண்டும் என மக்களவை உறுப்பினர் விஷ்ணுபிரசாத்திடம் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார்,  பி.செல்வன், சிவாஜி, உதயகுமார் சி.ஏ.செல்வம் உள்ளிட்டோர் கோரிக்கை மனு கொடுத்தனர்.