tamilnadu

img

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் சுகாதார சீர்கேடு

திருவண்ணாமலை,மே 15-திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் கழிவுநீர் வழிந்து ஓடுவதால் சுகாதார சீர்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுத்து, தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் திருவண்ணாமலை மத்தியப் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். இந்தப் பேருந்து நிலையத்தில் விழுப்புரம், திருச்சி பேருந்துகள் நிற்கும் இடத்தில் உள்ள ஒரே ஒரு குடிநீர்த் தொட்டியில் இருந்து சுத்திகரிக்கப்படாத குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த தொட்டியிலிருந்து வெளியேறும் தண்ணீர், கழிவு நீர் கலந்து பேருந்து நிலையத்தில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே, பேருந்து நிலையத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்கு முன், தண்ணீர் தொட்டியிலிருந்து வெளியேறும் தண்ணீரை வெளியேற்ற உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.