tamilnadu

img

பினாமி பெயரில் விவசாயக் கடன் மோசடி

திருவண்ணாமலை, ஆக.19- திருவண்ணாமலை மாவட்டம் வீரளூர் கிரா மத்தில் பினாமி பெயரில் விவசாயக் கடன் வழங்கி மோசடி நடந்துள்ளது. இதுப்பற்றிய விவரம் வருமாறு:- திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுகா வீரளூர் கிராமத் தில், கூட்டுறவு கடன் சங் கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் 5 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட  உறுப்பி னர்கள் உள்ளனர். இந்த  கூட்டுறவு கடன் சங்கத்தில்,  விவசாய கடன் வழங்குவ தில், பிறர் சொத்துக்களின் பேரில் போலியான ஆவ ணங்கள், சிட்டா, அடங்கல்  தயார் செய்து, பல லட்சக்  கணக்கான பணம் பினாமி யாக வழங்கப்பட்டுள்ளது. உண்மையான பல விவ சாயிகளுக்கு கடன் வழங்க மறுத்து விட்டு, விவசாயத் தொழில் செய்யாத பலருக்கு  விவசாயிகள் என்று, போலி யாக சிட்டா, அடங்கல் தயார்  செய்து கடன் வழங்கப் பட்டுள்ளது. கிராம நிர்வாக  அலுவலர்களின் முத்திரை களை போலியாக தயார்  செய்து, விவசாய அங்கத்தி னர்களுக்கு தெரியாம லேயே, அவர்களின் பெய ரில் நகைகளை வைத்து, நகைக் கடன் மற்றும் பயிர் கடன் பெற்றுள்ளனர். அப்படி பெறப்பட்ட கடன்  களுக்கு, அரசு கடன் தள்ளு படி திட்டத்தில் தள்ளுபடி செய்துள்ளனர். நிதி உதவி வங்கி மற்றும் துணைப் பதிவாளர் ஆகியோரின் அனுமதி பெறாமல், விவசா யம் சார்ந்த கடன்கள், பயிர்க்  கடன்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்கள், ஊனமுற்றோருக்கான கடன் கள் வழங்கியதில் மோசடி நடைபெற்றுள்ளது. இதேபோல்,  சிறு குறு விவசாயிகளுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி என, அரசு அறிவித்திருந்தும், பெரிய விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி பட்டியலில் சேர்த்து அரசுக்கும், சங்கத் திற்கும் இழப்பை ஏற்படுத்தி மோசடி செய்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத்  தலைவர் டி.கே.வெங்கடே சன் கூறியபோது, “மோசடி செய்தவர்கள் மீது உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும்.  இது குறித்த புகார் மனுவை,  கூட்டுறவு இணைப்பதிவா ளரிடம் தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் அளித்துள்ளது” என்றார். “புகார் மனுவை பெற்றுக்  கொண்ட இணைப்பதிவாளர் நந்தகுமார் கூறியபோது,  வீரளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆய்வு நடத்தி, முறைகேடு செய்த வர்கள் மீது உரிய நடவ டிக்கை எடுக்கப்படும்” என்றார்.