tamilnadu

img

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் விவசாயிகள் முற்றுகை

திருவண்ணாமலை, மார்ச் 9- திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த அனுக்குமலை  கிரா மத்தில் நேரடி நெல் கொள் முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.   இந்த நெல் கொள்முதல் நிலையம் முறையாக அமைக்கப்படாததால் தரை யில் கற்கள் சிதைந்து காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகள் கிழிந்து, நெல் வீணாவதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதேபோல், விவசாயி களின் நெல்லை எடை போடும்போது அளவுகளில் வித்தியாசம் காட்டுவது,  எடை போடும்போது மூட்டை ஒன்றுக்கு ரூ.60 முதல் 100 வரை  விவசாயிகளிடம் பணம் வசூல் செய்யப்படுகிறது.  நெல் கொள்முதல் நிலையத் திற்கு,வியாபாரிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகள் உடனுக்குடன் எடை போடப்பட்டு பட்டு வாடா  செய்யப்படுகிறது. ஆனால், விவசாயிகள் கொண்டுவரும் நெல்,  நாள் கணக்கில்  காக்க வைக்க ப்படுகிறது. இந்த முறைகேடுகளை கண்டித்தும், இதனை உடனே சரி செய்ய வலியு றுத்தியும் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் தலைமை யில் விவசாயிகள் திரு வண்ணாமலையில் உள்ள  தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இதில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க நிர்வாகிகள் எஸ். பலராமன் லட்சுமணன், ஏழுமலை  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;