திருவண்ணாமலை,மே 27- யூரியா விற்பனையில் ரூ. 90 கோடிக்கு முறைகேடு செய்ததை கண்டித்து திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் இரவு முழுவதும் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலை வர் எஸ்.பலராமன் கூறியதாவது:- திருவண்ணாமலை மாவட்டத்திற்கு, கடந்த 2021 ஏப்ரல் 1 முதல், 2022 மார்ச் 31 வரையிலான காலத்தில் 8 லட்சத்து 12 ஆயிரம் மூட்டை யூரியா (46000 டன்) வந்துள்ளது. ஆனால், யூரியாவை பதுக்கி வைத்துக்கொண்டு, அதிக விலைக்கு கள்ளத்தனக விற்பனை செய்ததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். விவசாயிகளுக்கு வழங்கப் படும் மானியம் பெருமளவில், வேளாண் துறை அலுவலர்களின் உறவினர்களுக்கும் வேண்டப்பட்ட வர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. யூரியா வாங்கும் போது விவசாயி களிடம் கூடவே குருணை வாங்க வேண்டும் என்று, தனியார் உர விற்பனையாளர்கள் கட்டாயப்படுத்தி விற்பனை செய்துள்ளார்கள். இது ஒரு பக்கெட் குறைந்தபட்சம் 550 ரூபாயி லிருந்து 800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் 90 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முறை கேடு நடந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது, நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி வியாழனன்று (மே 26) காலை முதல் இரவு முழுவதும் வேளாண் அலுவலகத்தில் முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், வழக்கறிஞர் எஸ்.அபிராமன், சிபிஎம் ஒன்றியச் செய லாளர் எஸ்.ராமதாஸ், அழகேசன், விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர்கள் லட்சுமணன், பழனி, செயலாளர் ரஜினிஏழுமலை, நிர்வாகிகள் அயூப்கான், செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நள்ளிரவில் விவசாயிகளிடம் பேச்ச வார்த்தை நடத்திய, வேளாண்மை (பொறுப்பு) இணை இயக்குநர், உயர் அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனது உறுதியளித்தனர். பிறகு போராட்டத்தை கைவிட்டனர்.