திருவண்ணாமலை, ஜூன் 8- திருவண்ணாமலை அருகே, கடலாடி பகுதியில் கத்தியை காட்டி செல்போன் பறித்த, மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்துார் அடுத்த சின்னக்கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (23). இவர், கடந்த 4ஆம் தேதி இரவு 8.30 மணியளவில், கடலாடி பகுதியில் சென்று கொண்டி ருந்த போது, மூன்று பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி ஒரு செல்போன், 600 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து கடலாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் காரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள், சிலம்பரசன் (2), மணிகண்டன் (26), மணி (26) ஆகிய மூன்று பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து, செல்போன், மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய, மூன்று பைக்கு களை பறிமுதல் செய்தனர்.