tamilnadu

குழந்தைகள் மீதான குற்றச்செயலைத் தடுக்க இளைஞர் நீதி குழுமம் மாவட்ட ஆட்சியர் தகவல்

திருப்பூர், நவ. 2- குழந்தைகள் மீதான குற்றச் செயல்களைத் தடுக்க இளைஞர் நீதி அமைப்பு நியமிக்கப்பட்டுள் ளதாக திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சி யர் க.விஜயகார்த்திகேயன் விடுத் துள்ள செய்தி குறிப்பில் கூறியி ருப்பதாவது, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் சு.பு.ஆனந்த் தலை மையில் அக்.30 அன்று துறை சார்ந்த அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடை பெற்றது. இதில் ஆணைய உறுப் பினர், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரி டையே காவல்துறை மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி வழங்கப் பட வேண்டும். மேலும், காவல் துறையில் பணியாற்றும் சிறப்பு சிறார் காவல் பிரிவு காவல் அலு வலர்கள் மற்றும் காவல் துறை யில் உள்ள குழந்தைகள் நல அலுவலர்களுக்கு ’இளைஞர் நீதி அமைப்பு”அதன் பொறுப்புகள் மற்றும் கடமைகள் குறித்து ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படும். இப் பயிற்சியை தமிழ்நாடு குழந்தை உரிமைகள் ஆணைய உறுப்பி னர் மோகன் வழங்குவார் என்றார். மேலும் காவல் துறையில் குழந் தைகள் சார்ந்த வழக்குகள் பதிவு  செய்யப்படும்போது குழந்தைகள் நலக்குழுவிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அனைத்து காவல் நிலையங்களிலும் குழந்தைகள் நல அலுவலர்கள் பணியமர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட் டது. இது குறித்து ஆய்வு மேற் கொண்டதன் அடிப்படையில்  மாவட்டத்தில் 38 குழந்தைகள் நல அலுவலர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர்.  மாவட்டத்தில் அரசுப்பள்ளி கள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் என 1997 பள்ளிகள் இயங்கி வருகின் றன. இப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை தடுத்தல் குறித்தும், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தை களை பாதுகாக்கும் சட்டம் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி இரண்டு மாதங்களுக்குள் பயிற்சி அளித்து அதன் அறிக்கையினை  மாவட்ட ஆட்சியரிடம் சமர்பிக்க வேண்டும். மேலும், பள்ளிகளுக்கு 100 அல்லது 200 மீட்டர் தொலை விற்குட்பட்ட பகுதிகளில்  மது பான கடைகள் அமைந்திருந்தால் அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கையினை துறை சார்ந்த அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளுக்கு அருகில் உள்ள பெட்டிக்கடைகளில் போதைப்பொருள்கள் விற்கப் படுகிறதா என ஆய்வு மேற் கொள்ள வேண்டும். காலை இறை வணக்கம் முடிந்த பின் மாணவ, மாணவியர்களுக்கு குழந்தைகள் சார்ந்த பிரச்சனைகள் குறித்து ஆசிரியர்கள் எடுத்துரைப்பதை மாவட்ட முதன்மை கல்வி அலு வலர் உறுதிப்படுத்த வேண்டும். மேலும், கட்டாய கல்வி உரி மைச்சட்டம் பிரிவு 19(டி)-ன்படி பள்ளிகளில் கல்விக்கட்டணங்கள் வசூலிப்பதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு, மாவட்ட கல்வி அலுவ லர், சமூகப்பணியாளர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர் மற்றும் இளைஞர் நீதிக் குழுமம் உறுப்பினர் ஆகிய உறுப்பினர்களைக் கொண்டு குழு அமைக்க அறிவுறுத்தப்பட்டது. குழந்தைகள் குற்ற செயல் குறித்த தகவல்கள் மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து தக வல்கள் தங்களுடைய கவனத் திற்கு வருமாயின் 1098 என்ற கட்டணமில்லா அலைபேசி எண் ணிற்கு  தொடர்பு கொள்ளலாம். மேலும், மாவட்டத்தில் உள்ள 17 குழந்தைகள் பாதுகாப்பு இல்லங் களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.  மாவட்டத்தில் போதை மறு வாழ்வு அலுவலர் பணியை மாவட்ட வருவாய் அலுவலரால் நியமிக்கப்பட வேண்டும். திருப் பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் வரவேற்பு இல்லம் தொடங்குவதற்கான தகுதி வாய்ந்த இல்லத்தை இரண்டு வார காலத்திற்குள் கண்டறிய வேண்டும்.  மேலும், சைல்டு லைன் மற் றும் அரசு சாரா தொண்டு நிறுவ னங்கள் ஆகியவற்றை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலு வலர் ஆய்வு செய்ய வேண்டும். குழந்தைத் தொழிலாளர் தடுப் புச்சட்டம் 1986-யின்படி,  திருப் பூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப் படவில்லை என்பதை தொழிலா ளர் நலத்துறை அலுவலர் உறுதி செய்யவேண்டும். அனைத்து  தொழிற்சாலைகளிலும் திடீர் ஆய்வு மேற்கொள்ள  மாவட்ட அலுவலர்களைக் கொண்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் திடீர் ஆய்வு மேற் கொண்டு, குற்றச்செயல்களில் ஈடு படும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண் டும். மேலும், 14 வயதிற்கு மேற் பட்ட குழந்தைகள் பள்ளியில் கல்வி பயில்வதை உறுதிப்படுத்த வேண்டும். மேற்குறிப்பிட்ட அனைத்து துறை சார்ந்த அலு வலர்களால் மேற்கொள்ளப்பட்ட குழந்தைகள் சார்ந்த நடவடிக் கைகள் குறித்து ஒரு வாரத்திற் குள் அறிக்கையினை  சமர்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட் டது என மாவட்ட ஆட்சியர் தெரி வித்துள்ளார்.

;