24 மணி நேரம் கடை திறக்க மாநில அரசு அனுமதி 11 மணிக்கு மேல் திறந்திருந்தால் காவல் துறை மிரட்டல் சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்கம் கண்டனம்
திருப்பூர், ஜூன் 13 - தமிழகத்தில் 24 மணி நேரம் கடைகளைத் திறந்து வைத்து வியாபாரம் செய்யலாம் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இரவு 11 மணிக்கு மேல் கடை திறந்திருந்தால் வழக்குப் பதிவு செய்வோம் என்று மாநகர காவல் துறை மிரட்டல் விடுக்கிறது என்று சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்கம் கண்டனம் தெரி வித்துள்ளது. திருப்பூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத் தின் தலைவர் பி.முருகேசன் தலைமையில் மாவட்டக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கச் செயலாளர் பி.பாலன், சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் சி.மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் தள்ளுவண்டி வியாபாரி களை மாற்று இடம் தராமல் காலி செய்யக் கூடாது. தென்னம்பாளையம் தினசரி மார்க்கெட்டில் சாலை களைச் செப்பனிட்டுத் தர வேண்டும். மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. ஆனால் பல இடங்களில் குழாய்கள் உடைப்பெடுத்து குடிநீர் வீணா கிறது. எனவே அவற்றைச் சரி செய்து குடிநீர் சீராக மக்களுக்குக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பழைய பேருந்து நிலையத்தில் கழிப்பிடத்தை சுத்தமாகப் பராமரிக்கவும், எரியாத மின் விளக்குகளை பழுது பார்த்து சரி செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தனியார் வேலைவாய்ப்பு முகாம்
திருப்பூர், ஜூன் 13- திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தனியார் துறை சார்பில், திருப்பூரில் இன்று (வெள்ளி யன்று) வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தனியார்துறை வேலை வாய்ப்பு இன்று (ஜூன் 14) காலை 10.30 மணிக்கு, புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தளம் எண் 4, அறை எண் 439, திருப்பூர் - 641 604 என்ற முகவரியில் நடைபெறுகிறது. இந்த முகாமில் தனியார்துறையில் வேலை அளிப்பவர்கள் கலந்துகொண்டு தேவையானவர் களைத் தேர்வு செய்ய உள்ளனர். வேலை தேடுபவர்கள், தங்கள் வேலைவாய்ப்பு அலு வலக பதிவு அட்டை, சுயதகவல் படிவத்துடன் இந்த முகாமில் கலந்துகொள்ளலாம். மேலும் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள், முதல் முதுநிலை பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்கள், ஓட்டுநர்கள், தையல் பயிற்சி பெற்றவர்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெறலாம். வேலைவாய்ப்பு முகாமுக்கு வரும்போது தங்களது பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால், அதையும் சரி செய்து கொள்ளலாம். கூடுதல் கல்வி பதிவு செய்தல், வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பித்தல், புதுப்பித்தல் ஆகியவற்றையும் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
அவிநாசியில் ஜமாபந்தி
அவிநாசி, ஜூன் 13- அவிநாசி அடுத்த சேவூர் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் ஜமாபந்தி யில் மனு அளித்தனர். அவிநாசி ஒன்றியம் சேவூர் சுற்றுவட்டார கிராம பகுதியை சேர்ந்த பொது மக்கள், பட்டா மாறுதல், முதி யோர் ஓய்வூதியம் மற்றும் பல்வேறு வகையான 239 மனுக்கள் ஆதிதிராவிட நலத்துறை மற்றும் பழங் குடியின அதிகாரி மகராஜ் விடம் அளித்தனர். மனுக் களை பெற்றுக் கொண்டு உடனடியாக தீர்வு காணப் படும் எனக்கூறினார். வட்டாட்சியர் வாணி லட்சுமி ஜெகதாம்பாள் மற்றும் துறை சார்ந்த அதி காரிகள் உடன் இருந்தனர். மேலும் வெள்ளியன்று அவிநாசி மேற்குப்பகுதி ஊராட்சிகளான கரு வலூர், தெக்கலூர், நம்பியா பாளையம், வேலாயுதம் பாளையம், செமியா நல்லூர் , வேட்டுபாளையம், உப்பிலிபாளையம் உள் ளிட்ட பகுதிகளில் ஜமா பந்தி நடைபெற உள்ளது.