tamilnadu

திருப்பூர் செய்திகள்

விபத்தில் முதியவர் பலி
அவிநாசி, மே 30-அவிநாசி நாராசா வீதி யைச் சேர்ந்தவர் சுந்தரவடிவேல் (59). இவர் புதனன்று இரவு அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே வழியாகச் சென்ற வேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.  இதில் படுகாயமடைந்த சுந்தரவடிவேல்  மருந்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். 

அவிநாசியில் பருத்தி ஏலம்
அவிநாசி, 30-அவிநாசியில் புதனன்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ. 16.36லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம் நடைபெற்றது. அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்துக்கு 930 மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தன. இதில், ஆர்.சி.எச். ரகப்பருத்தி ஒரு குவிண்டால் ரூ. 5,500 முதல் ரூ. 6,255 வரையிலும், மட்ட ரகப் பருத்தி ஒரு குவிண்டால் ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 4 ஆயிரம் வரையிலும் ஏலம் போனது. காலை முதல் இரவு வரை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் மொத்தம் ரூ.16.36 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.